எசாயா 48:10
நான் உன்னைப் புடமிட்டேன்;ஆனால், வெள்ளியைப் போலல்ல; துன்பம் எனும் உலை வழியாய் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்.இணைந்து செபிப்போம்
இரண்டாவது திருவழிபாடு ஆண்டு திருவருகைக்காலம் 1வது வாரம் சனிக்கிழமை
2021-12-04
ஆண்டவரே இயேசுவே,
அப்பா பிதாவே! அதிசயங்கள் செய்பவரே! உம்மை ஆராதிக்கின்றேன். மாண்பு மிக்கவரே! நுண்ணறிவின் ஊற்றானவரே! உம்மைத் துதிக்கின்றேன். உடைந்த உள்ளத்தைக் குணப்படுத்தி புதுவலுத்தந்து நடத்துபவரே! நன்றி கூறுகின்றேன். “உங்களுக்குத் துன்பம் எனும் அப்பத்தையும் ஒடுக்குதல் எனும் நீரையும் கொடுத்திருந்தாலும், இனித் தம்மை மறைத்துக் கொள்ளமாட்டார்” என்று, இன்றைய இறைவார்த்தையில் அருளுகின்றீரே! உமது முகத்தின் ஒளி என்மீதும் என் குடும்பத்தின் மீதும் வீசச் செய்யும். அதனால் உமது தூய பாதையில் நடப்போமாக. இயேசுவே! உடைந்த உள்ளத்தோரைக் குணப்படுத்துகின்றவரே! என் காயங்களை ஆற்றுகின்றவரே! என் பாவங்களால் வருவித்துக் கொண்ட காயங்களைப் போக்கியருளும். என் பாவங்களை உமக்கு அறிக்கையிட்டுக் கதறுகின்ற என் வேண்டுதல்களை உற்றுக் கேளும். நொருங்கிய நெஞ்சத்தினரை கண்ணோக்கும். ஆண்டவரே இயேசுவே! என்னை உருமாற்றி, புத்துயிர் தந்தருளும். இந்த நாளை உமது பரிசுத்த கல்வாரிக்குக் காணிக்கை ஆக்குகின்றேன். அமைதி தருபவரே! சாத்தானை வெற்றி கொள்ள பலம் தாரும். உமது வெளிப்படுவதற்காகக் காத்திருக்கும் எனக்கு அருள்கொடை எதிலும் குறைவு இல்லாமல் இருக்கவும்; உமது அருள் என்னுடன் தங்கவும் செய்ய வேண்டும் என்று, இயேசுவின் நாமத்தில் செபிக்கிறேன். ஆமென்
http://www.tamilcatholicdaily.com
No comments:
Post a Comment